உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நேரடி தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி

நேரடி தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, இந்த வருடத்தில் வெளியான மாஸ்டர் தெலுங்கு பதிப்பு மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தநிலையில் விஜய்சேதுபதியை வைத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இந்தப்படத்திற்கான கதையையும் விஜய்சேதுபதியிடம் சொல்லி ஒகே வாங்கி விட்டார்களாம். குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக இருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட பங்கு தருவதாகவும் பேசப்பட்டுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !