உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த படத்தை அறிவித்தார் வெங்கட்பிரபு

அடுத்த படத்தை அறிவித்தார் வெங்கட்பிரபு

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி முடித்து விட்டார் வெங்கட்பிரபு. தற்போது மற்ற பணிகள் நடக்கின்றன. கொரோனா பிரச்னை தீர்ந்ததும் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெங்கட்பிரபு தனது அடுத்தப்படத்தை அறிவித்துள்ளார். டி.முருகானந்தத்தின் ராக்போர்டு எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு அடுத்த படத்தை இயக்குகிறார். இது வெங்கட்பிரபுவின் 10ஆவது படமாகும். தற்போது மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கின்றன. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !