திருமணம் தள்ளி வைப்பு : புதிய படங்களில் மெஹ்ரீன்
ADDED : 1591 days ago
நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்துள்ள மெஹ்ரீன், தற்போது தெலுங்கில் எப்-3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அரசியல் பிரமுகர் பவ்யா பிஷ்னாயுடன் மெஹ்ரீனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து வரைவில் திருமண தேதி அறிவிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு எப்-3 படத்தில் நடித்து முடித்ததும் புதிய படங்களில் கமிட்டாக மாட்டேன் என்று கூறி வந்தார் மெஹ்ரீன் பிரஜடா. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் சினிமாவில் நடிப்பை தொடரப் போவதாக அறிவித்துள்ள மெஹ்ரீன், இனிமேல் நடிக்கப்போவதில்லை என்று சொல்லி தான் திருப்பி அனுப்பிய பட நிறுவனங்களிடம் மீண்டும் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம்.