கொரியன் பட ரீமேக்கில் இணைந்த நிவேதா தாமஸ்
ADDED : 1591 days ago
தமிழில் ஜெய் நடித்த நவீன திருவிளையாடல் படத்தில் நாயகியாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காததால் கமலின் பாபநாசம், ரஜினியின் தர்பார் படங்களில் மகள் வேடங்களில் நடித்தார். அதேசமயம் தெலுங்கில் நானி, ஜூனியர் என்டிஆர் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.
வழக்கமான கமர்சியல் கதாநாயகியாக இல்லாமல் தனது திறமைக்கு முக்கியத்துவமுள்ள படங்களாக மட்டுமே நடித்து வரும் அவர், தற்போது கொரியன் மொழியில் வெளியான மிட் நைட் ரன்னர்ஸ் என்ற திரில்லர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கமிட்டாகியிருக்கிறார். தெலுங்கில் ஷாகினி தாகினி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த படத்தில் ரெஜினாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ்.