ஜுன் 1ல் ஜகமே தந்திரம் டிரைலர் ரிலீஸ்
ADDED : 1637 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள படம் ‛ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்னையால் தள்ளிப்போனது. தொடர்ந்து தியேட்டரில் வெளியீட்டில் வெளியிட சூழல் இல்லாததால் ஓடிடியில் வெளியிட முடிவெடுத்தனர். இதற்கு தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி தெரிவித்தாலும் தயாரிப்பாளர் ஓடிடி வெளியீட்டில் உறுதியாக உள்ளார். ஜுன் 18ல் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இப்போது ஜுன் 1ல் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.