உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை பிரணிதா சுபாஷ் திடீர் திருமணம்

நடிகை பிரணிதா சுபாஷ் திடீர் திருமணம்

2011ம் ஆண்டு வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானர் கர்நாடகாவைச் சேர்ந்த பிரணிதா சுபாஷ். அதன் பின் தமிழில் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, மற்றும் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இல்லை என்றாலும் இரண்டாவது கதாநாயகியாக சில வெற்றிகரமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.


பிரணிதாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த பிறகுதான் அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற விஷயம் வெளியில் தெரிந்துள்ளது. நேற்று கூட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வந்த பிரணிதா தனது திருமணம் பற்றி எதுவுமே வெளியிடவில்லை.

புதுமணத் தம்பதியினருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !