இனி ஜனனி மட்டுமே
ADDED : 1691 days ago
அவன் இவன், பாகன், தெகிடி, அதே கண்கள், விதி மதி உல்டா, தர்மபிரபு உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தற்போது தொட்டாசினிங்கி, வேஷம், கசட தபற, பகீரா, யாக்கை திரி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுநாள்வரை ஜனனி ஐயர் என தனது பெயரை குறிப்பிட்டு வந்தவர் திடீரென இப்போது சமூகவலைதளங்களில், தனது பெயரை ஜனனி என்று மாற்றி இருக்கிறார். அதோடு மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று பதிவிட்டு ஜனனி என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.