உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரகுல் பிரீத் சிங்கிடம் மறைந்திருக்கும் இன்னொரு திறமை

ரகுல் பிரீத் சிங்கிடம் மறைந்திருக்கும் இன்னொரு திறமை

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, ஐதராபாத், வைசாக்கில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருபவர், அடுத்தபடியாக பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை பயிற்சி கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்காக அந்த கலைகளை தற்போது தான் பயிற்சி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛என் குடும்பத்தினர் பலரும் இந்திய ராணுவத்தில் இருப்பதால் நான் குழந்தை பருவத்தில் இருந்தே மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நான் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக வைத்திருப்பதற்கும் அதுவே காரணம். மேலும், இதுதவிர சிறுவயதில் இருந்தே எனக்கு கோல்ப் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில், பள்ளி காலத்தில் 14 முறை தேசிய கோல்ப் போட்டிகளில்விளையாடியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !