உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒப்பீடு பற்றி கவலைப்படவில்லை : தமன்னா

ஒப்பீடு பற்றி கவலைப்படவில்லை : தமன்னா

தற்போது நவம்பர் ஸ்டோரி என்ற தமிழ் வெப்சீரிஸில் நடித்துள்ள தமன்னாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.. அதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதேசமயம் இதற்கு முன்பு தெலுங்கில் அவர் நடித்திருந்த 11 ஹவர்ஸ் என்ற வெப்சீரிஸிற்கு வரவேற்பு இல்லை.

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள ஒரு பதிலில், ‛‛சினிமாவில் கவர்ச்சி நாயகி என்று மட்டுமே அறியப்பட்ட நான் இப்போது வெப்சீரிஸில் பர்பாமென்ஸ் நடிகையாக என்னை நிரூபித்து வருகிறேன். தற்போது வெளியாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆனால் 11 ஹவர்ஸ் தொடர் வெற்றி பெறவில்லை. அதற்காக எனது நடிப்பை குறை சொல்ல முடியாது. வெற்றி தோல்விகளை ஒப்பிடுவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எனது பணி மட்டுமே அனைத்துக்கும் பதிலளிக்கும். அடுத்தடுத்து நடிக்கும் தொடர்களில் இன்னும் வலுவான வேடங்களில் தைரியமாக நடித்து என்னை நிரூபிப்பேன்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !