உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அஜித் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சமீபகாலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருநபர் தான் இப்படியொரு தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்ததாக தெரிய வந்தது.

இந்தநிலையில் நேற்று சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அஜித்தின் வீட்டிற்கு போலீசார் சோதனை செய்ததாகவும், ஆனால் அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !