மீண்டும் விவசாயி ஆன கீர்த்தி பாண்டியன்
சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் பாஸ்ட்புட் கடையின் பிரீசர் அறைக்குள் மாட்டிக் கொண்ட இளம் பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள். தும்பா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி இருந்தபோது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள எட்டேரி என்ற தனது கிராமத்துக்கு சென்று விட்டார். அங்கு தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விவசாய பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
இப்போது இரண்டாவது அலைத் தொற்று தீவிரமாக இருக்கும்போது மீண்டும் தனது கிராமத்திற்கே சென்று விவசாய வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டார். தான் வயலில் இறங்கி வேலை செய்யும் படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர் மீண்டும் விவசாய பணியில் இறங்கி விட்டேன். மழையை கொடுத்த இறைவனுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.