உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அசத்தல் அறிமுகம் : பாபி சிம்ஹா பெருமிதம்

அசத்தல் அறிமுகம் : பாபி சிம்ஹா பெருமிதம்

தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தற்போது முதன்முதலாக 'சார்லி 777' என்கிற படம் மூலம், கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. கன்னட உலகில் வளர்ந்து வரும் ஹீரோவான ரக்சித் ஷெட்டியும் இதில் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். கிரண்ராஜ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

இந்தப்படம் குறித்து பாபி சிம்ஹா கூறும்போது, “நீண்ட நாட்களாகவே கன்னட படத்தில் நடிக்கும்படி அழைப்பு வந்துகொண்டுதான் இருந்தது.. திடீரென ஒருநாள் ரகசித் ஷெட்டி என்னை அழைத்து இந்த கதையை சொல்லி அவருடைய நண்பன் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்கவேண்டும் என கேட்டபோது மறுக்க முடியவில்லை. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள நட்பை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.

கன்னடம் பேசி நடிப்பதிலும் ஒன்றும் சிரமம் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, நானே கன்னடத்தில் டப்பிங்கும் பேசியுள்ளேன். கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு இன்னும் வசதியாக இருந்தது. மொத்த படமும் முடிவடைந்து பார்த்தபோது, கன்னடத்தில் இதைவிட வேறு நல்ல அறிமுகம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !