உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு எப்போது? - விஷால் தகவல்

துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு எப்போது? - விஷால் தகவல்

இரும்புத்திரைக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து விட்டன. அதனால் உடனடியாக ஒரு ஹிட் தேவை என்கிற கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் விஷால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.

மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வந்த படம் துப்பறிவாளன்-2. இந்த படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் அதிகப்படுத்தியதாக அவரை புகார் சொன்னதையடுத்து, இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு படமே நின்று போனது. என்றாலும், மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோதிலும் படப்பிடிப்பை தொடரவில்லை விஷால்.

இந்நிலையில் தற்போது எனிமி படத்தை முடித்து விட்டவர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை தொடரப் போகிறாராம். அதோடு தியேட்டர்களில் வெளியிடும் சூழல் அமையாத பட்சத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !