கேரள ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட ஷிவானி
ADDED : 1629 days ago
சீரியல்களில் பிரபலமாகி பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி நாராயணன், தொடர்ந்து சோசியல் மீடியாவில் அதிரடியான, போட்டோக்கள், குத்தாட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை தெறிக்க விட்டு வருகிறார். கூடிய சீக்கிரமே சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து கலக்கி வரும் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் பட்டியலில் ஷிவானியும் இடம்பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இந்தநிலையில் தற்போது கேரள ஸ்டைலில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு கியூட் ரியாக்சனும் கொடுத்திருக்கிறார் ஷிவானி. அதற்கு லைக்ஸ்களை வாரி வழங்கி வரும் நெட்டிசன்கள், மை ஓமனக் குட்டி, தங்கமே என்றெல்லாம் அவரை வர்ணித்து உள்ளனர்.