மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1579 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1579 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1579 days ago
‛‛வணக்கம் சென்னை, காளி'' என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
“வணக்கம் சென்னை, காளி படங்களுக்கு பின் நான் இயக்கும் முன்றாவது படம் இது. சிறந்த கதை ஒன்று அமைய வேண்டும் என்று சிறிது காலம் எடுத்து கொண்டேன், அப்போது தோன்றியது தான் இப்படத்தை கதை. இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை, இக்கதையில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்படும்” என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
1579 days ago
1579 days ago
1579 days ago