உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய்பல்லவிக்கு பதிலாக அசின் : பிரேமம் இயக்குனர் புது தகவல்

சாய்பல்லவிக்கு பதிலாக அசின் : பிரேமம் இயக்குனர் புது தகவல்

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம், மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக அதில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் அசினை நடிக்க வைக்க முயற்சித்ததாக தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் அந்த கதாபாத்திரத்தை மலையாள டீச்சராகத்தான் உருவாக்கி இருந்தேன். அதில் அசினை நடிக்கவைக்க முயற்சி செய்து அது முடியாமல் போனது. அதன்பிறகு ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் மாற்றம் செய்து தமிழ் டீச்சராக மாற்றி, அதில் சாய்பல்லவியை நடிக்க வைத்தேன். என் சிறுவயதில் ஊட்டியில் படித்ததாலும், கல்லூரி படிப்பை சென்னையில் படித்ததாலும் இயல்பாகவே தமிழ் மீது எனக்கு ஆர்வம் இருந்தது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !