மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1548 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1548 days ago
தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெறும் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர் சல்மான் கான். அப்படியான படங்களை அவர் தவறாமல் பார்த்தும் விடுவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் படம் 50 சதவீத இருக்கைகளிலேயே 200 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது. படத்தை தெலுங்கு, ஹிந்தியில் கூட டப்பிங் செய்து வெளியிட்டார்கள். ஆனால், ஹிந்தியில் படம் படுதோல்வி அடைந்தது.
இருந்தாலும் அந்தப் படத்தை ஹிந்தி நடிகரை வைத்து ரீமேக் செய்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என ரீமேக் உரிமையை வாங்க போட்டி போட்டார்கள். தற்போது விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கானை அணுகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழைப் போலவே விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி ஹிந்தி ஹீரோவை நடிக்க வைத்தால் படம் இன்னும் பிரம்மாண்டமாகும் என எதிர்பார்க்கிறார்களாம்.
ஏற்கெனவே, விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மாதவன், விஜய் சேதுபதி கதாபாத்திரங்களில் நடிக்க பலரது பெயர்கள் அடிபட்டது. இதுவரையில் அந்த ரீமேக்கைப் பற்றிய உறுதியான தகவல்கள் முடிவாகவில்லை. இந்நிலையில் மாஸ்டர் பட ரீமேக்காவது உறுதியாக நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
1548 days ago
1548 days ago