ரவுடி பேபி பாடலை எழுத தூண்டியது எது : தனுஷ்
ADDED : 1578 days ago
ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் ஒரு பாடலாசிரியராக, பாடகராக உலகம் முழுதும் பிரபலமானார் தனுஷ். அதை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு மாரி 2 படத்திற்காக தனுஷ் சாய்பல்லவி நடனத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் குழந்தைகளின் மனம் கவர்ந்த பாடலாக மாறி, தற்போது வரை, ஆயிரம் மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேஜை மீது வைத்திருக்கும் கோலிசோடா பாட்டில் ஒன்றை பார்த்தபடி தனுஷ் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்துடன், “ஹே.ய்... ஏ கோலிசோடாவே பாடல் மனதில் தோன்றிய தருணம்” என குறிப்பிட்டுள்ளார். கோலிசோடா பாட்டிலை பார்த்ததும் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தி பாடலை துவங்க வேண்டும் என தனுஷுக்கு தோன்றியது ஆச்சர்யம் தான்.