மேலும் செய்திகள்
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!
1571 days ago
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
1571 days ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
1571 days ago
தமிழ் சினிமா இயக்குனர்களில் கவுதம் மேனன் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒரு ஸ்டைலிசான இயக்குனர் என்பதால் அவர் படங்களில் நடிக்க அனைவருமே ஆசைப்படுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட கவுதம் மேனன் தனது டுவிட்டரில், யோகிபாபு நடித்த மண்டேலா படத்தைப் பார்த்தவர் ஒரு சிறந்த காமெடி படம் என்று சொல்லி படக்குழுவுக்கு வாழ்த்து சொல்லியிருந்தார். அதோடு, யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து தான் பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கூறி யோகி பாபுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
இந்த தகவல் யோகிபாபுவின் கவனத்துக்கு சென்றதும் உடனடியாக தனது டுவிட்டரில் நன்றி கவுதம் மேனன் சார் என்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், யோகிபாபுவுடன் இணைந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்ன கவுதம் மேனன், அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாரா? இல்லை தனது படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாரா? என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1571 days ago
1571 days ago
1571 days ago