மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1574 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1574 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1574 days ago
பரதேசி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா. என்றாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு அழகுட்டி செல்லம், அஞ்சல, கபாலி, ஒரு நாள் கூத்து, இருமுகன், எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது, ஓநாய்கள் ஜாக்கிரதை டார்ச்லைட், சிகை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில படங்களில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தாலும் முழுமையான ஹீரோயினாக நடித்ததில்லை.
முதன் முறையாக மாடு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காமெடி நடிகர் காளி வெங்கட் நடிக்கிறார். புதுமுக இயக்குனர் பிரம்மா இயக்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிறகு தனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று கருதிய ரித்விகாவிற்க்கு எதிர்பார்த்தது போன்று வாய்ப்புகள் அமையவில்லை. காலம் கடந்தாலும் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.
1574 days ago
1574 days ago
1574 days ago