மீண்டும் பாகுபலி ஸ்டைலில் பிரபாஸ் படம்
ADDED : 1622 days ago
பாகுபலி படங்களுக்கு பின் இந்திய நடிகராக உயர்ந்துவிட்ட பிரபாஸ் கைவசம் தற்போது ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படங்கள் உள்ளன. இவை அனைத்துமே பான் இந்திய படமாக உருவாக உள்ளது. இவற்றில் கே.ஜி.எப்., புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படம் பாதி முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது. பிரபாஸின் 25வது படமாக தயாராகும் இப்படம் பாகுபலி போன்று சரித்திர பின்னணியில் தயாராகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இதுவும் பான் இந்திய படமாகவே உருவாக்க உள்ளனர்.