வதந்தியை பரப்பாதீர்கள் - பாயல் ராஜ்புட்
ADDED : 1622 days ago
வினய் நடித்த இருவர் உள்ளம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புட். அதன்பின் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிறமொழிகளில் நடித்தார். சிறு இடைவெளிக்கு பின் தற்போது உதயநிதியின் ‛ஏஞ்சல்' படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விரைவில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 5 துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாயல் பங்கேற்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள இவர், ‛‛இது தவறான தகவல். தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்கிறேன்'' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பாயல் ராஜ்புட்.