கப்பிங் தெரபி சிகிச்சை எடுத்த விஷ்ணு விஷால்
ADDED : 1622 days ago
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ்ணு விஷால். எப்.ஐ.ஆர்., படத்தை முடித்துவிட்டு அடுத்து மோகன்தாஸ் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை மறுமணம் செய்தார். இந்நிலையில் பழங்கால சிகிச்சை முறைகளில் ஒன்றான ‛கப்பிங் தெரபி' சிகிச்சை எடுத்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, ‛‛கடினமான பயிற்சி, கடினமான மீட்பு'' என பதிவிட்டுள்ளார். உலகளவில் விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் மத்தியில் இந்த முறை சிகிச்சை மிகவும் பிரபலமானது ஆகும்.