உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்று ஹீரோக்களை உருவாக்கிய பெருமிதத்தில் 19 ஆம் ஆண்டில் ஜெயம்

மூன்று ஹீரோக்களை உருவாக்கிய பெருமிதத்தில் 19 ஆம் ஆண்டில் ஜெயம்

கடந்த 2002-ல் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஜெயம். இன்று 19 ஆம் வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த படம் குறித்து இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நித்தின், தனது மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். தேஜா இயக்கிய இந்த படத்தில் தான், நிதின் கதாநாயகனாக முதல்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

அதுமட்டுமல்ல இந்தப் படத்தில்தான் வில்லன் நடிகராக கோபிசந்த் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பின்னாளில் ஹீரோவாக புரமோஷன் பெற்றார். மேலும் இந்தப் படம் தான் தமிழிலும் ஜெயம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதன் மூலம் ஜெயம் ரவி என்கிற இன்னொரு கதாநாயகனும் உருவானார். அந்த வகையில் மூன்று கதாநாயகர்களை உருவாக்கிய பெருமை இந்த ஜெயம் படத்திற்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !