உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருது பெற்ற நடிகர் சாலை விபத்தில் மரணம்

தேசிய விருது பெற்ற நடிகர் சாலை விபத்தில் மரணம்

கன்னட திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சாரி விஜய். இவர் நேற்று முன்தினம் (ஜூன் - 12) விபத்தில் சிக்கி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கூட பலனில்லாமல் கோமா நிலைக்கு சென்றார் சஞ்சாரி விஜய். இதையடுத்து அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்க, அவரது உடல் உறுப்புகள் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி தானம் செய்யப்பட்டது. இவரது மறைவு கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014-ல் வெளியான நான் அவனில்ல அவளு என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதற்காக தேசிய விருது பெற்றார் சஞ்சாரி விஜய். ஒரு முறை ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் மம்முட்டி தனக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு ஓரமாக அமர்ந்திருந்த சஞ்சாரி விஜய்யை தேடிச்சென்று பாராட்டி ஆச்சரியப்படுத்தினார். இத்தனைக்கும் மம்முட்டி அவரை நேரில் ஒருமுறை கூட பார்த்ததில்லை நான் அவனில்ல அவளு படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய்த்தான், இப்படி ஒரு கௌரவத்தை மம்முட்டி அந்த நடிகருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !