'டுவிட்டர்' கணக்கு: செந்திலும் புகார்
ADDED : 1618 days ago
சார்லியை தொடர்ந்து, காமெடி நடிகர் செந்திலும், தன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது குறித்து, போலீசில் புகார் செய்துள்ளார். மது விற்பனையை எதிர்த்து, டுவிட்டரில் செந்தில் கருத்து வெளியிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த அவர், 'சாதாரண கணக்கே எனக்கு தெரியாது. டுவிட்டரில் எந்த கணக்கும் எனக்கு இல்லை' என்றார். டுவிட்டர் மட்டுமின்றி, முகநுால் உள்ளிட்ட ஏராளமான சமூக வலைதளத்தில், பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் மலிந்துள்ளன. இது குறித்து, சம்பந்தப்பட்ட அந்த சமூக வலைதளமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.