விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் கொரோனா நிதி
ADDED : 1572 days ago
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கடந்தாண்டை விட மிக அதிகம். கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள், தொலதிபர்கள் உள்ளிட்ட பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார் விஜய் சேதுபதி.