கன்னட பிலிம் சேம்பர் முன்னாள் தலைவர் சந்திரசேகர் காலமானார்
ADDED : 1573 days ago
கன்னட திரைப்பட வர்த்தக சபையில் மூன்று முறை தலைவராக இருந்தவர் கே.சி.என்.சந்திரசேகர். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டமைப்பின் துணை தலைவராகவும் இருந்தார். தணிக்கை குழு உறுப்பினர், இந்தியன் பனோரமா திரைப்பட விழா குழு உறுப்பினர், மாநில அரசின் விருது குழு உறுப்பினர் என பல பதவிகளில் பணியாற்றினார். பெங்களூரில் பல தியேட்டர்களை நடத்தி வந்தவர். 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கன்னட சினிமாவின் ராஜகுரு என்று அழைக்கப்பட்டவர்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று காலமானர். அவருக்கு வயது 76. சந்திரசேகரின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எதிர்கட்சித் தலைவர் சீத்தாராமய்யா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.