குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடும் சாய் பல்லவி
ADDED : 1573 days ago
தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விராட்டா பர்வம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி. மேலும் சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டுள்ளார். மேலும் சில நடிகைகளைப் போன்று அடிக்கடி தனது போட்டோ, வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட மாட்டார் சாய் பல்லவி. எப்போதாவது தான் அத்தி பூத்த மாதிரி போட்டோக்களை பதிவிடுவார். அந்தவகையில் தனது சகோதரி மற்றும் குடும்ப உறவினர்களுடன் தான் மகிழ்ச்சியாக செலவிடும் நேரத்தின் போது தான் எடுத்துக் கொண்ட ஆல்பத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு எப்போதும் நான் என் குடும்பத்தை அதிகமாக நேசிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.