அஜித்தின் வலிமை- வெளிநாடு செல்லும் திட்டம் ரத்தா
ADDED : 1619 days ago
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித்தின் ரசிகர்கள் தொல்லை கொடுத்தனர். ஒரு வழியாக அஜித்தின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் என்றனர். பின்னர் கொரோனா பிரச்னையால் அதுவும் தள்ளிப்போனது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரே ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டியிருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் இதை படமாக்க மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அதனால் இனிமேலும் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை டில்லி அல்லது ராஜஸ்தானில் படமாக்க திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.