உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதி

தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு பணிக்காக தயாரிப்பாளர் தாணு, தமிழக முதல்வரிடம் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார். முதல்வரை பாராட்டி கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெருந்தொற்று காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில், உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பி பார்க்க வைக்கிறது. நீங்கள் செய்த பல பணிகள் உங்களுக்கும், சந்ததிகளுக்கும் நீண்ட ஆயுளை அள்ளித்தரும். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !