நடிகை ஜோதி மீனாவின் தந்தை மறைவு
ADDED : 1572 days ago
மறைந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமியின் கணவரும், மாஜி கவர்ச்சி நடிகை ஜோதி மீனாவின் தந்தையுமான சாய்பிரசாத் இன்று(ஜூன் 16) உடல் நல பிரச்சனையால் காலமானார். சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்த வந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.