விஜே திவ்யாவுக்கு வந்த அந்தரங்க வீடியோ : சைபர் கிரைமில் புகார் அளிக்க முடிவு
ADDED : 1619 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜே திவ்யா. அதோடு சில படங்களிலும் பின்னணியும் பாடியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் திவ்யாவை ZayoKair என்ற ஐடியில் இருந்து தொடர்பு கொண்ட ஒரு நபர், பிராண்ட்டு ஒன்றை பிரமோசன் செய்ய வேண்டும் என்று மெசேஜ் செய்துள்ளார். அதையடுத்து உங்களது பிராண்டின் ஐடியில் இருந்தே என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று திவ்யா அவரிடத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால் அவரோ அந்தரங்க வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா அந்த நபரின் ஐடியின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ள திவ்யா, இதுபோன்ற நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பவர், அதுகுறித்து சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்போவதாகவும் பதிவிட்டுள்ளார்.