சுஷாந்த் பட பாடலை பாடி வீடியோ வெளியிட்ட பிகில் பட நடிகை
ADDED : 1586 days ago
விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரெபோ மோனிகா. அதையடுத்து மழையில் நனைகிறேன், எப்ஐஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தனது அதிரடி போட்டோக்களை வெளியிட்டு வரும் ரெபோ மோனிகா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
அதாவது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் புட் நடித்த ஹிந்தி படத்தின் பாடல் ஒன்றை கிட்டார் வாசித்துக் கொண்டே பாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரெபோ மோனிகாவின் இந்த திறமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.