உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாட்ரிக் அடிக்கப் போகும் அஜித், வினோத் கூட்டணி

ஹாட்ரிக் அடிக்கப் போகும் அஜித், வினோத் கூட்டணி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், ஒரு இயக்குனருடன் கூட்டணி சேர்ந்து அவரைப் பிடித்துவிட்டால் அவருடன் அடுத்தடுத்து கூட்டணி சேர்ந்து நடிப்பார். அஜித் - இயக்குனர் சிவா கூட்டணி 4 படங்களில் இணைந்தனர். அவற்றில் ரசிகர்களுக்கு 'வேதாளம், விஸ்வாசம்' என இரண்டு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தது. அடுத்த கூட்டணியாக அஜித் - இயக்குனர் வினோத் கூட்டணி அமைந்துள்ளது.

'நேர் கொண்ட பார்வை' படத்தில் முதன் முதலாக இணைந்த இந்தக் கூட்டணி அடுத்து 'வலிமை' படத்திலும் இணைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'வலிமை' படம் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் பட்ஜெட் நிறையவே அதிகமாகிவிட்டதாம். அதைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட அஜித், மீண்டும் போனி கபூரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். இப்படத்தையும் வினோத் தான் இயக்கப் போகிறாராம்.

'வலிமை அப்டேட்' உடன் சேர்த்து இப்படத்தின் அப்டேட்டும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !