சல்மான் - பூஜா பட தலைப்பு மாற்றம்
ADDED : 1571 days ago
தற்போது விஜய்யின் 65வது படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே, தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா, மோஸ்ட் எலிஸிபில் பேச்சுலர் என மூன்று படங்களில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஒரு படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு கபி ஈத் கபி தீபாவளி என முதலில் தலைப்பு வைக்க எண்ணியிருந்தனர். ஆனால் இதனால் ஏதேனும் பிரச்னை வருமோ என எண்ணிய படக்குழு தற்போது பைஜான் என மாற்றி உள்ளனர். இப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிப்பதால் இதன் மூலம் பாலிவுட்டில் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என எண்ணுகிறார் பூஜா.