மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1567 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1567 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1567 days ago
பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருந்தார். போதை பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் 100 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 180 சாட்சியங்களை விசாரித்த பிறகு, 2400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராகிணி தான் ஒரு பெண் என்பதால் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பெங்களூரூ விஜயாபுரா பகுதியில் திருநங்கைகளுக்கான ரத்ததானம் மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற ராகிணி, பின்பு நிருபர்களிடம் பேசினார். அப்போது போதை பொருள் வழக்கு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
இந்த சமூகத்தில் பெண்களை எளிதில் வீழ்த்திவிட முடியும். என் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா பெண்களுக்குமே இது நடக்கிறது. அதுவும் ஒரு பெண் வெற்றிகரமாக இருந்தால் அது இன்னும் அதிகமாகிறது, மோசமாகிறது.
என் விஷயத்தில் எல்லோருமே என்னைக் குறிவைத்து, எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தார்கள். திட்டமிட்டு என்னை சிக்க வைத்தார்கள். ஆனால், எனக்கு அவர்களைப் பற்றி தெரியாத நிலையில், நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும்? இன்னும் என் நடிப்புக்காக என்னை ரசிகர்கள் விரும்புகிறார்கள். என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தை மறக்கடிக்கச் செய்யும் ரசிகர்கள் எனக்கு உள்ளனர். எல்லாவற்றிலும் இருந்து நான் மீண்டு வருவேன். என்கிறார் ராகிணி.
1567 days ago
1567 days ago
1567 days ago