நயன்தாராவின் நெற்றிக்கண் 25 கோடிக்கு விற்பனை?
ADDED : 1570 days ago
ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தபடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்தராவ் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஓடிடியில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரூ. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரியன் படமான பிளைன்ட் என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த நெற்றிக்கண் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடித்துள்ள நயன்தாரா, ஒரு சைக்கோ கொலைகாரனை பழிவாங்கும் கதையில் நடித்துள்ளார்.