தியேட்டருக்கு வரும் அருண் விஜய் படம்
ADDED : 1569 days ago
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த மெகா படங்கள் அந்த முடிவை மாற்றி தியேட்டரை நோக்கி திரும்பி நிற்கின்றன.
அந்த வகையில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் என்ற படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதற்காக அறிகுறிகள் தெரிந்து விட்டதால் பார்டர் படத்தை ஆகஸ்ட் 12-ந்தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் அருண் விஜய்.