8 தோட்டாக்கள் தெலுங்கு ரீ-மேக்கில் சந்தோஷ் ஷோபன்
ADDED : 1571 days ago
2017ல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர் என பலரது நடிப்பில் வெளியான படம் 8 தோட்டாக்கள். இப்படத்தை தமிழில் இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார்.
தெலுங்கில் வெளியான ஏக் மினி கதா உள்பட சில படங்களில் நடித்துள்ள சந்தோஷ் ஷோபன் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நடிக்கிறார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் சந்தோஷ், அந்த படங்களை முடித்ததும் 8 தோட்டாக்கள் ரீமேக்கில் நடிக்கிறாராம்.
இவரது தந்தை ஷோபன் மறைந்த தெலுங்குப்பட இயக்குனர் ஆவார். அவர் இயக்கிய வர்ஷம் என்ற படம் தான் பிரபாசுக்கு தெலுங்கில் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதனால் சந்தோஷ் ஷோபனின் சினிமாவில் வளர்ச்சிக்கு பிரபாஸ் உறுதுணையாக இருந்து வருகிறாராம்.