உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஜல் அகர்வாலை சீக்கிரம் அம்மா ஆகச் சொல்லும் தங்கை

காஜல் அகர்வாலை சீக்கிரம் அம்மா ஆகச் சொல்லும் தங்கை

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். அக்காவிற்கு முன்பாகவே 2013ம் ஆண்டிலேயே திருமணம் செய்து கொண்டார். நிஷாவிற்கு மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இன்று அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “சில சுயநலமான காரணங்களால் அவர் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கிறேன். அவருக்குத் திருமணமான நாளிலிருந்தே நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் இதில் தாமதித்தால் எனது மகனுக்கு துணை கிடைக்காது. அவனுக்கு இப்போதே 3 வயது ஆகிறது. அதனால் அவர்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தங்கையின் ஆசையை காஜல் எப்போது நிறைவேற்றுவார் ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !