காமெடி ராஜா கலக்கல் ராணி: புதிய காமெடி நிகழ்ச்சி
ADDED : 1572 days ago
காமெடி நிகழ்ச்சிகளை விதவிதமாக வழங்குவது விஜய் தொலைக்காட்சியின் ஸ்பெஷல். கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, அது இது எது என பல்வேறு தலைப்புகளில் காமெடி நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது.
இப்போது காமெடி ராஜா, கலக்கல் ராணி என்ற புதிய காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. இதில் கலக்கப்போவது யாரு புகழ் தங்கதுரை, தீபா, குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் உள்பட பலர் கலந்து கொண்டு காமெடி செய்கிறார்கள். இவர்களுடன் யாராவது ஒரு பிரபல நடிகர், அல்லது நடிகை கலந்து கொள்வது இதன் சிறப்பம்சம்.
வருகிற 27ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.