லைகா ரூ.2 கோடி கொரோனா நிதி
ADDED : 1584 days ago
கொரோனாவை தடுக்கும் பொருட்டு திரையுலகில் உள்ள பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகாவின் சுபாஸ்கரன் சார்பில் ரூ.2 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கவுரவ் சச்ரா ஆகியோர் வழங்கினார். இந்த சந்திப்பின் போது நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.