காஜலின் 36வது பிறந்தநாள் : ரொமான்டிக் பரிசு கொடுத்த கணவர்
ADDED : 1628 days ago
கடந்த ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இந்நிலையில் நேற்று தனது 36வதுபிறந்த நாளை கணவருடன் கொண்டாடியிருக்கிறார் காஜல் அகர்வால். அதையடுத்து திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் கொண்டாடியபோது தாங்கள் எடுத்துக் கொண்ட 30 விதமான ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காஜலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவரது கணவர் கவுதம் கிச்சுலு. அதோடு, அந்த போட்டோக்களில் 30 ஆயிரம் நிறைவுகளும், சந்தோசங்களும் ஒளிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.