உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செல்ல நாய் குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோசூட்

செல்ல நாய் குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோசூட்

பெரும்பாலும் நடிகைகள் தங்களது பாய்பிரண்டுகளுடன் கடற்கரைகளில் பிகினி அணிந்து குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் கீர்த்தி சுரேசோ தற்போது கடற்கரையில் தனது செல்ல நாய்க்குட்டி நைக்குடன் இணைந்து ஒரு போட்டோசூட் நடத்தியுள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், செல்ல நாய் குட்டியை கட்டிப்பிடித்து, கைகோர்த்து கடற்கரை மணல் வெளியில் ஓடி பிடித்து கொஞ்சி விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ‛‛சரியான வானிலை, சரியான துணை, கடற்கரையில் சுற்றுலா. எனக்கு வேறு என்ன தேவை'' என்றும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !