உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா - ஜோதிகா

தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா - ஜோதிகா

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் ஆர்வமாய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் ஜோடியாக இன்று(ஜூன் 22) தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போட்டோவை சூர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதேப்போன்று நடிகர் விக்ரம் பிரபுவும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !