உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்

அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்

1996ல் வெளியான கில்லாடி யோன் கா கில்லாடி என்ற படத்தில் மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் மாதிரியான ஒரு கேரக்டரை அக்ஷய் குமார் சண்டையிட்டு வீழ்த்துவார். இந்நிலையில் சமீபத்தில் அண்டர்டேக்கரை வீழ்த்தியவர்கள் என ஒரு மீம்ஸ் வெளியானது. அதில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் போட்டோவும் இருந்தது. இதை பகிர்ந்து, ‛‛இப்போது நிஜ சண்டைக்கு தயாரா என அக்ஷயிடம் கேட்டிருந்தார் அண்டர்டேக்கர். அதற்கு, ‛‛கொஞ்சம் பொறுங்கள் எனது காப்பீட்டை ஆய்வு செய்துவிட்டு பதில் கூறுகிறேன் சகோதரரே'' என நகைச்சுவையாக அக்ஷய் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !