சிங்கக் குட்டிகளுடன் விளையாடிய ராய் லட்சுமிக்கு கண்டனங்கள்
ADDED : 1567 days ago
கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராய் லட்சுமி. அஜித் உடன் மங்காத்தா படத்தில் நடித்தது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் கடைசியாக ஸ்ரீகாந்த் உடன் மிருகா படத்தில் நடித்திருந்தார். ராய் லட்சுமி விலங்கியல் பூங்கா ஒன்றில் சிங்கக் குட்டிக்கு பால் கொடுத்திருக்கிறார். மேலும் கூண்டில் இருக்கும் விலங்குகளிடம் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோ அவரின் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் விலங்குகளை இப்படி கூண்டில் அடைத்து வைப்பது அவைகளின் சுதந்திரத்தை கெடுக்கும் செயல். இதனை எப்படி ஆதரிக்கலாம் என்று லட்சுமி ராய்க்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.