ரசிகரை நெகிழ வைத்த கமல்
ADDED : 1613 days ago
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான சாகேத் என்பவர் மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் கனடாவில் சிகிச்சை பெறுகிறார். கமலிடம் பேச வேண்டும் என்பது இவரது ஆசை. இந்த விஷயம் கமலின் கவனத்திற்கு வர வீடியோ கால் மூலம் பேசி சாகேத்தை நெகிழ வைத்தார். மேலும் தேர்தலில் உங்களின் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என கமலிடம் தெரிவித்த சாகேத், தனது மகனை செல்லமாக விருமாண்டி என்றே அழைப்பதாகவும், இந்த நோயிலிருந்து போராடி மீண்டு வருவேன் என்றார். அதோடு தங்களை நேரில் சந்திக்கலாமா என கேட்ட சாகேத்திடம் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் பார்க்கலாம் என்றார். இந்த சந்திப்பின் போது கமல் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.