உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரகாஷ்ராஜ் - விஷ்ணு மஞ்சுவுடன் மோதும் நடிகை ஜீவிதா

பிரகாஷ்ராஜ் - விஷ்ணு மஞ்சுவுடன் மோதும் நடிகை ஜீவிதா

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நடிகர்கள் பிரகாஷ்ராஜ் - விஷ்ணு மஞ்சு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் தற்போது நடிகை ஜீவிதா தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் மும்முனைப்போட்டியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகை ஜீவிதா மற்றும் அவரது கணவரான நடிகர் ராஜசேகர் ஆகியோர் செயலாளர் மற்றும் நிர்வாக தலைவராக வெற்றி பெறறனர். ஆனால் ராஜசேகர் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவரான நரேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ராஜசேகர் போட்டியிடாத நிலையில் ஜீவிதா மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !